தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை ஒரே  ஆட்டத்தில் முறியடித்த ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா!!

தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை ஒரே  ஆட்டத்தில் முறியடித்த ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கிய ரோஹித் போட்டியில் தோனி மற்றும் விராட் கோலி இருவரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இது சர்வதேச அரங்கில் 1000-வது டி20 போட்டியாகும். அதேபோல் இது இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இது 99-வது டி20 போட்டிகும்.

rohit

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 98 டி20 போட்டிகளில் ஆடியது இந்திய வீரர்களின் மத்தியில் அதிகபட்சமாக இருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக ரோகித் சர்மா அதிக டி20 போட்டிகள் ஆடியவர்கள் பட்டியலில் இந்திய வீரர்களின் மத்தியில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 111 டி20 போட்டிகளில் ஆடியதே தற்போது வரை அதிகபட்சமாக உள்ளது. இதற்கு அடுத்ததாக மற்றுமொரு பாகிஸ்தான் வீரர்கள் சயித் அப்ரிடி 99 போட்டிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். அதேபோல் ரோஹித் சர்மா 99 போட்டிகளில் ஆடி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் மற்றும் சயீத் அப்ரிடி இருவரும் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni,rohit,virat

கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் ரோகித் சர்மாவை விட 7 ரன்கள் மட்டுமே அதிகமாக இருந்தார். இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது எட்டாவது ரன்னை அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இவர் தற்போது 2452 அடித்திருக்கிறார்.

-vicky