தோனி பலமுறை தவறான முடிவுகளை எடுத்துள்ளார்: இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குற்றச்சாட்டு!?

 

தோனி பலமுறை தவறான முடிவுகளை எடுத்துள்ளார்: இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குற்றச்சாட்டு!?

தோனி எடுக்கும் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

தோனி எடுக்கும் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. தனது தனித்துவத்தாலும் அதிரடியாலும் ரசிகர்களை தன்  பக்கம் ஈர்த்தவர். இந்திய அணி மட்டும் இல்லாது ஐபிஎல் தொடரில் சென்னை அணியையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தும் தோனி கூல் கேப்டன் என்றே அழைக்கப்படுகிறார். 

dhoni

தோனியை புகழாத ஆட்களே இல்லை. உலகிலேயே சிறந்த கேப்டன் தோனி என்று வெஸ்ட் இண்டீஸ்  வீரர் பிராவோ புகழ்ந்துள்ளார். தோனி  போட்டியில் இருந்தால் போதும், எனக்கு எந்த கவலையும் இல்லை என்று விராட் கோலியும், தோனியின் ஆலோசனை தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்திய அணியின் வீரர்கள் பலரும் கூறியுள்ளனர். 

dhoni

அதன்படி எட்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி இறுதி போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் தங்கள் தரப்பில் நிறைய தவறுகள் இருக்கிறது. ஆனால்  அதை ஆராய நேரம் இல்லை. உலகக் கோப்பையில் சந்திப்போம்’ என்று தனக்கே உண்டான பாணியில் கூலாக சொல்லிவிட்டு நகர்ந்தார். 

kuldeep

இந்நிலையில்  இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தோனி குறித்து  பேசியுள்ளார். அதில், ‘ தோனி  தேவையில்லாமல் மைதானத்திற்குள் பேசமாட்டார். அப்படிப் பேச வேண்டும் என்றால் ஓவர்களுக்கு இடையே பேசுவார். சில சமயங்களில் பந்து வீசும் போது  அவர் எங்களுக்கு அளிக்கும் டிப்ஸ்கள் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால்  அவரிடம் இதை எங்களால் கூற முடியாது’ என்று தெரிவித்துள்ளார். 

தோனி  குறித்த குல்தீப் யாதவின் இந்த கருத்துக்கு அவரது ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் சிலரோ அவரும்  மனுஷன் தான் கடவுள் இல்லை என்றும் கருத்து கூறி வருகின்றனர்.