தோனி உலகை வெல்லும் வீரர் இல்லை, அவரிடம் நிறைய எதிர்பார்க்காதீர்கள் – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தடாலடி!

 

தோனி உலகை வெல்லும்  வீரர் இல்லை, அவரிடம் நிறைய எதிர்பார்க்காதீர்கள் – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தடாலடி!

பேட்ஸ்மேனாக தோனியின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 

மும்பை: பேட்ஸ்மேனாக தோனியின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 

2019ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தோனி தான் இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் செயல்படும் தோனி தொடர்ந்து பேட்டிங்கில் பெரிதாக சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். சென்ற வாரம் முடிந்த ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும் தோனியின் அதிரடி பேட்டிங்கை காண முடியவில்லை. 

sanjay

இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், ‘தோனி தற்போது உலகை வெல்லும் வீரர் இல்லை. ஆசிய கோப்பை தொடரில் கேதர் ஜாவுக்கு முன் அவர் பேட்டிங் செய்ய வந்தது சரியான முடிவல்ல. கேதர் ஜாதவ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பேட்ஸ்மேனாக தோனியின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.  தோனி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர். தோனி போன்ற அனுபவம் மிக்க வீரர் கோலிக்கு தேவை. இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக ஒரு சிறந்த வீரரைத் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகக்கோப்பை தொடரில் தோனி அவரது கீப்பிங் திறமைக்காவும், அனுபவத்திற்காகவும் விளையாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.