தோனிய தப்பா பேச யாருக்கும் தகுதி இல்ல; சேன் வார்ன் காட்டம்!!

தோனிய தப்பா பேச யாருக்கும் தகுதி இல்ல; சேன் வார்ன் காட்டம்!!

வயதை காரணம் காட்டி தோனியை விமர்சித்து வருபவர்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சேன் வார்ன் கடுமையாக சாடியுள்ளார். ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமாக கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரிய முன்னாள் கேப்டன் தோனி, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விராட் கோஹ்லியின் கீழ் விளையாடி வருகிறார்.

Dhoni

இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தோனி மிகச்சரியாக செய்து வரும் தோனி, ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் அவரை கடுமையாக விமர்சிக்கும் ஒரு கூட்டம் அவரின் வயதை காரணம் காட்டி அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. தன் மீதான அனைத்து விமர்ச்சனங்களுக்கும் தனது பேட் மூலம் பதிலடி கொடுத்து வரும் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இந்த உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தோனியின் ஓய்வு குறித்து பேசிய முன்னாள் ஜாம்பவான் சேன் வார்ன், ஓய்வு முடிவை தோனி மட்டுமே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எப்பொழுது ஓய்வு பெற வேண்டும் என்பது தோனிக்கு மிக நன்றாக தெரியும். அந்த முடிவை அவரே எடுத்து கொள்வார், தோனியை பற்றியும், அவரையும் ஓய்வையும் பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்.