தோனியை சந்தித்து பிறவி பயனை அடைந்த விக்னேஷ் சிவன்!

 

தோனியை சந்தித்து பிறவி பயனை அடைந்த விக்னேஷ் சிவன்!

கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்தன் மூலம் தனது வாழ்நள் கனவு நிறைவேறிவிட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்தன் மூலம் தனது வாழ்நள் கனவு நிறைவேறிவிட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மகேந்திர சிங் தோனி என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை பலமுறை சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் தோனியின் பெயர் இடம்பெறாததற்கு பிசிசிஐ-க்கு விக்னேஷ் சிவன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தோனியை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ‘எனது வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது. தல தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணம் எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. இந்த அதிசயத்தை நடக்க வைத்த கடவுளுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.