தோனியின் வீட்டில் திருடியவர்கள் கைது… லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

தோனியின் வீட்டில் திருடியவர்கள் கைது… லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமான நொய்டா செக்டர் 104 வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

dhoni

மகேந்திர சிங் தோனி, தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தோனிக்கு உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும்  செக்டர் 104ல் வீடு உள்ளது. விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த சமயத்தில், விக்ரம் சிங், அங்கிருந்து வெளியேறியிருந்த பொழுது, வீட்டில் இருந்த எல்சிடி டிவி மாயமாகி உள்ளது.

arrested

இதுதொடர்பாக, விக்ரம் சிங், நொய்டா செக்டர் 39 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிரசாந்த் கபில், நடத்திய தொடர் விசாரணையில், குற்றவாளிகளைத் தேடி வந்த போலீசார் யை இன்று ராகுல், பப்லு, இக்லாக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
கொள்ளையர்களிடமிருந்து இன்வெர்ட்டர்ஸ், 5 மடிக்கணினிகள், 5 எல்.இ.டி. டிவிக்கள், மற்ற வீட்டு உபயோகப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.