தோனியின் டெஸ்ட் சாதனையை தகர்த்தெறிந்த கேப்டன் விராட்கோலி!

 

தோனியின் டெஸ்ட் சாதனையை தகர்த்தெறிந்த கேப்டன் விராட்கோலி!

Virat Kohli breaks Dhoni's Test record

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்று தோனியின் சாதனையை தகர்த்த எறிந்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

india vs bangladesh test

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை படைத்திருக்கிறார் கேப்டன் விராட்கோலி.

அதாவது டெஸ்ட் அரங்கில் இந்திய கேப்டன்களில் மத்தியில் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றவர் என்ற தோனியின் சாதனையை முறியடித்து தற்போது முதலிடம் பிடித்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. இவர் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் 10 முறை இன்னிங்ஸ் வெற்றியை டெஸ்ட் அரங்கில் பதிவு செய்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஒன்பது இன்னிங்ஸ் வெற்றிகளுடன் எம்.எஸ். தோனி இருக்கிறார்.

இந்திய கேப்டன்கள் மத்தியில் அதிகமுறை இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுத் தந்தவர்களின் பட்டியல்

#1 விராட் கோலி – 10 முறை

#2 எம்.எஸ். தோனி – 9 முறை

#3 அசாருதின் – 8 முறை

#4 கங்குலி – 7 முறை

வங்கதேச டெஸ்ட் தொடர்:

முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து வருகிற 22-ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது. இதற்காக பிரத்தியேகமாக பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த போட்டியை காண வங்கதேச பிரதமர், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.