தோசை, பூரி, சப்பாத்திக்கு செம டேஸ்ட்டியான பாம்பே சட்னி

 

தோசை, பூரி, சப்பாத்திக்கு செம டேஸ்ட்டியான பாம்பே சட்னி

தோசை, பூரி, சப்பாத்தி, இட்லி போன்ற டிபன் அயிட்டங்களுக்கு மிகவும் சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய பாம்பே சட்னியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

தோசை, பூரி, சப்பாத்தி, இட்லி போன்ற டிபன் அயிட்டங்களுக்கு மிகவும் சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய பாம்பே சட்னியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கடலைப்பருப்பு: 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்: 2
மிளகாய் வற்றல்: 2
வெங்காயம்: 1(பொடியாக நறுக்கவும்)
தக்காளி: 1
தேங்காய் துருவல்: 1 டேபிள்ஸ்பூன்
கடுகு: 1 டீஸ்பூன்
உளுந்து: 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிது
கொத்தமல்லி: சிறிது

செய்முறை:

கடலைப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலைப்பருப்பு தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.சீக்கிரம் கெட்டி தன்மை வரும். அப்போது இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான பாம்பே சட்னி தயார்.