தொழில் முடங்கியதால் ; பேனர் கடைக்காரர் தற்கொலை முயற்சி..

 

தொழில் முடங்கியதால் ; பேனர் கடைக்காரர் தற்கொலை முயற்சி..

தி மன்ற உத்தரவால் தொடர்ந்து கடையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.கடை நடத்தவும்,பிரிண்டர் மெஷின் வாங்கவும் வெளியிலிருந்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிதான் இந்தக் கடையை ஆரம்பித்திருக்கிறார்.

சென்னையில் முறைகேடாக வைத்திருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து,பேனர் வைப்பதற்கு உயர் நீதி மன்றம் தடை விதித்தற்கு எதிராக அந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கங்கே தங்களது எதிர்ப்பையும்,அதை முறைப்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

Protest

இந்நிலையில், பேனர் தொழிலால் ஏற்பட்ட இழப்பைத் தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த தகவல் பலரையும் அதிர வைத்திருக்கிறது.

மதுரை மாவட்டம் கீழமாத்தூரில் விக்னேஷ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமயபுரம் பகுதியில் பேனர் தயாரித்து கொடுக்கும் கடையை நடத்தி வந்திருக்கிறார்.நீதி மன்ற உத்தரவால் தொடர்ந்து கடையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.கடை நடத்தவும்,பிரிண்டர் மெஷின் வாங்கவும் வெளியிலிருந்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிதான் இந்தக் கடையை ஆரம்பித்திருக்கிறார்.

Suicide attempt

தொழில் நஷ்டத்தால் கடன் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழலாலும்,பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாததாலும் மனமுடைந்த விக்னேஷ் தமிழக அரசுக்கும் உயர் நீதி மன்றத்திற்கும் கடிதம் எழுதி வைத்து விட்டு, எலி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். வீட்டின் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சரியான நேரத்தில் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப் பட்டதால் டாக்டர்கள் அவரது உயிரைக் காப்பாற்றிவிட்டனர். அவருக்கு ராஜாஜி மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.