தொழில் தொடங்க உடனே அனுமதி தருகிறோம்! – எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்

 

தொழில் தொடங்க உடனே அனுமதி தருகிறோம்! – எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்

“தமிழகத்தில் தொழில் தொடங்க குறுகிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறது… சிறு, குறு தொழில்கள் முன்னேற்றம் காண பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் தொழில் தொடங்க குறுகிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறது… சிறு, குறு தொழில்கள் முன்னேற்றம் காண பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் 125வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழக தொழில் வளர்ச்சிக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மிக முக்கிய பங்காற்றியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அமைப்பின் பங்கு மிகப் பெரியது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக மாற வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

eps-meeting

தமிழக அரசு தொழில் தொடங்க குறுகிய காலத்தில் அனுமதி அளித்து வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டட அனுமதி கோரும் தொழிற்சாலைகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டால், நிறுவனங்கள் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டுமான பணிகளை தொடங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத தங்க நகை உற்பத்தி, அலுமினிய பாத்தி தயாரிப்பு, சிமெண்ட் உற்பத்தி, ஆயுர்வேத மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 63 தொழில்களை உள்ளடக்கிய பச்சை வகைப்பாடு தொழிற்சாலைகளை இயக்குவதற்கான இசைவாணையை நேரடியாக வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பச்சை வகைப்பாடு நிறுவனங்கள் தொழிற்பூங்கா, அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுவுவதற்கான அனுமதியைப் பெற, கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தாலே போதும். நிறுவனங்கள் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டுமானப் பணியைத் தொடங்கலாம். இதனால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பயன்பெறும்” என்றார்.