தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

 

தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்

டெல்லி: மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில், இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முன்னணி தொழில் அதிபர்களும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். நாட்டில் எளிமையாக தொழில் தொடங்க உகந்த சூழல்களை மேம்படுத்தவும், சீர்திருத்ங்களை மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, உலக வங்கி வெளியிட்ட, உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்து உள்ளது. இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கனவாக உள்ளது என்பது குறிப்படத்தக்கது.