தொழில்துறை உற்பத்தி குறைந்தது….. மந்தகதியிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருகிறதா? வாய் கொடுத்து மாட்டி கொண்ட நிர்மலா சீதாராமன்……

 

தொழில்துறை உற்பத்தி குறைந்தது….. மந்தகதியிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருகிறதா? வாய் கொடுத்து மாட்டி கொண்ட  நிர்மலா சீதாராமன்……

2019 டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்த அதற்கு அடுத்த நாளில் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 2019 டிசம்பரில் 1.3 சதவீதம் உயர்ந்தது. அதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் அதிகரித்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும்.

தொழிற்சாலை

கடந்த டிசம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது. 2019 டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்துள்ளது. 2019 நவம்பரில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

தொழிற்சாலை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பட்ஜெட் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளிக்கையில், பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் நேற்று வெளியான கடந்த டிசம்பர் தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம், பொருளாதாரம் உண்மையில் மீண்டு வருகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.