தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக குறைப்பு – 6 கோடி சம்பளதாரர்கள் பாதிப்பு

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக குறைப்பு – 6 கோடி சம்பளதாரர்கள் பாதிப்பு

நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.5 சதவீதமாக குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை: நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.5 சதவீதமாக குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கத் தீர்மானித்து இருப்பதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார். இந்த வட்டி விகிதம் 2015- 2016 நிதியாண்டில் 8.8 சதவீதமாக இருந்தது. அடுத்த இரண்டு நிதியாண்டுகளும் 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டது. மீண்டும் 2018 – 2019 நிதியாண்டில் 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

ttn

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதத்தில் 0.15 சதவீதம் குறைக்கப்பட்டு 8.5 சதவீதமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார். இதனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அதிகமாக முதலீடு செய்து வரும் 6 கோடிக்கும் அதிகமான சம்பளதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.