தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரூ. 1 கோடி… எடப்பாடியிடம் வழங்கப்படும்! – ப.சிதம்பரம் அறிவிப்பு 

 

தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரூ. 1 கோடி… எடப்பாடியிடம் வழங்கப்படும்! – ப.சிதம்பரம் அறிவிப்பு 

வெளி மாநிலங்களில் சிக்கி தொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதியுறும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு கோடி ரூபாயை வழங்க உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலங்களில் சிக்கி தொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதியுறும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு கோடி ரூபாயை வழங்க உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

tamils-in-maharashtra

ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான உதவிகள் செய்யப்படுவதாக அரசுகள் தெரிவித்தாலும் உதவிகள் வந்து சேரவில்லை என்று பலரும் புகார் கூறி வருகின்றனர். மேலும் சுய மரியாதையைவிட்டு தினமும் வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிடுவதற்கு பதில் சொந்த ஊருக்குச் சென்றால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால், லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு சென்றார்கள்.
இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு மத்திய அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் கேட்டு தொழிலாளர்கள் நொந்தனர். பல மடங்கு கட்டணத்தை உயர்த்தியதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் அவதியுற்றனர்.

delhi-walking.jpg

இதனால், மத்திய அரசு ரயிலை இயக்க மாநில அரசுகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் ரூ.1 கோடியை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். மேலும், ரூ.151 கோடியை பிஎம் கேர்ஸ்க்கு நிவாரண நிதியாக வழங்கிய ரயில்வேயால் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முடியவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
இதன் அடிப்படையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ரூ.1 கோடியை வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த ரயில்களை இயக்க 85 சதவிகிதம் மானியத்தையும் மாநில அரசு ரூ.15 சதவிகித மானியத்தையும் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.