தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுங்க…… கொரோனாவால் மூடப்பட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு….

 

தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுங்க…… கொரோனாவால் மூடப்பட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு….

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸால் நிறுவனங்கள் மூடப்பட்டாலும், தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என தொழில்துறையினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து அத்தியாவசியமில்லாத அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டன. இதனால் பல கோடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். மேலும் வருமானம் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கிய நிலையில் உள்ளனர்.

நிறுவனங்கள் அடைப்பு

உத்தர பிரதேசத்தில் 21 நாட்கள் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியதாவது: முடக்க காலத்தில் மூடப்பட்ட நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களை அரசு அதிகாரிகள் கண்டு பிடித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் கஜானாவிலிருந்து ரூ.1,000 ஆயிரம் வழங்க வேண்டும்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

தங்களது வீடுகளில் வாடகைக்கு தங்கியிருப்பவர்கள் ஏழை அல்லது தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தால் அவர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை மக்களால் செலுத்த முடியவில்லை என்றாலும், அவை துண்டிக்கப்படாது. மாநிலத்தில் ஒருவர் அல்லது ஒருத்தி எங்கு இருந்தாலும், உணவு, குடிநீர் மற்றும் மருந்து அவர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி உறுதி செய்யும். மற்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களின் தினசரி மற்றும் பொருளாதார தேவைகளை அதிகாரிகள் கவனிப்பது அவசியம். அப்படி செய்தால் அவர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என்ற தேவையை உணரமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.