தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் – தொடரும் எஸ் பேங்க் அவலம்!

 

தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் – தொடரும் எஸ் பேங்க் அவலம்!

எஸ் பேங்க் பண மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி: எஸ் பேங்க் பண மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க் சந்தித்தது. இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

yes bank

இந்த நிலையில், எஸ் பேங்க்கில் தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு சொந்தமான எஸ்ஸெல் குழுமம் சுமார் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன் தொகையை நிலுவையில் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சுபாஷ் சந்திராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அனில் அம்பானி, அவந்தா குழுமத்தின் கவுதம் தாப்பர் என வரிசையாக பெரும் தொழிலதிபர்களின் பெயர்கள் எஸ் பேங்க் விவகாரத்தில் அடிபடுவது வணிக உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.