தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

 

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

புகழ்பெற்ற தொல்லிய அறிஞர் ஐராவதம் மகாதேவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னை: புகழ்பெற்ற தொல்லிய அறிஞர் ஐராவதம் மகாதேவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் பிறந்தவர் ஐராவதம் மகாதேவன். கடந்த 1930-ம் ஆண்டு பிறந்த அவர் 1987 – 1991-ம் ஆண்டு வரை தமிழின் முன்னணி நாளிதழான தினமணியின் ஆசிரியராக பணியாற்றியவர். மேலும் தொல்லியல் துறையில் புகழ்பெற்று திகழ்ந்த மகாதேவன் சிந்துசமவெளி நாகரீகத்திற்கும், திராவிட நாகரீகத்திற்கும் தொடர்பு இருக்கிறது என உரக்க கூறியவர். 

இவரது தொல்லியல் துறை சாதனைகளை பாராட்டி மகாதேவனுக்கு கடந்த 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்துள்ள இவர் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை நடத்தி உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் சென்னை ஆதம்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு இல்லத்தில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஐராவதம் மகாதேவன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பத்திரிகை உலகை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.