தொலைந்து போன முகிலன் – அவருக்கு எதிராகத் திரும்பும் நண்பர்கள்!

 

தொலைந்து போன முகிலன் – அவருக்கு எதிராகத் திரும்பும் நண்பர்கள்!

முகிலன் காணாமல் போனாரா ? கடத்தப் பட்டாரா ?

காணாமல் போன சூழலியல் போராளி முகிலன் கடந்த பிப்ரவரி 16 – ஆம் தேதி நள்ளிரவு  12..06 மணி முதல் 12.48 மணி வரை முகநூலில் செயல்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 15 – ஆம் தேதி தொலைந்து போன முகிலனின் முகநூல் கணக்கு அதற்குப்  பிறகு இயங்கியுள்ளதை வைத்து அவர் கைபேசி அப்போது இருந்த இடத்தை கண்டறிய முடியுமா என சிபிசிஐடி போலீசார் முயன்று வருகின்றனர்.

போராளி முகிலன் 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சொந்த ஊராகக் கொண்ட முகிலன் சமூக மற்றும் சூழலியல் தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் தனது நண்பரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்ரீதர் என்பவரை சென்னை ஆலந்தூரில் சந்தித்து விட்டு  கடந்த பிப்ரவரி 15 – ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரை புறப்பட இருந்தார். முன்னதாக அதற்கு முந்தைய நாள் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வகையில் ஒரு காணொளியை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகிலன்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், தன் நண்பர் பொன்னரசன் என்பவரை வேறு ஒரு ரயிலில் ஏற்றி விட்ட பின், தான் மதுரை மஹால் எக்ஸ்பிரஸ் – இல் முன்பதிவு செய்யப்படாத வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய இருப்பதாக கூறி விட்டு சென்றார். ஆனால், அவர் மதுரை செல்லவில்லை. கண்காணிப்பு கேமெராக்களில் முகிலன் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

எதிராகத் திரும்பும் நண்பர்கள் 

முகிலனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கொதித்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரே திரும்பி வருகின்றனர். முகிலனின் நெருங்கிய நண்பரும் போராளியான இசை கூறுகையில், ” முகிலனைப் பற்றி கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியமளிக்கின்றன. அவர் திரும்பி வந்த பின் இதைப் பற்றி ஒவ்வொன்றாக அவரிடம் பேச வேண்டும். அதற்கு தான் காத்திருக்கிறேன்.” என்றார்.

முகிலன்

தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், ” முகிலன் எப்போதும் போராட்டங்களின் தலைமை பொறுப்பை எடுத்துக் கொள்ள விரும்புகிறார். அரசியல் தலைவர்களைப் பற்றி தவறாக பேசி தன்னை முன்னிறுத்திக் கொள்ள பார்க்கிறார். அவரது இந்த செய்கைகளை நாங்கள் விரும்பவில்லை. அதனால் ஆதரவளிப்பதை நிறுத்திக் கொண்டோம்.” என்று முகிலனைப் பற்றி தெரிவிக்கின்றனர்.

முகிலனை பற்றிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவர் திரும்பி வந்த பிறகு தான் பதில் கிடைக்கும் என்பது மறுக்க முடியாது உண்மை.