தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்

 

தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்

பிரபல ஏர்டெல் நிறுவனம் மத்திய தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி தொகையை நிலுவைத் தொகையாக செலுத்தியுள்ளது.

டெல்லி: பிரபல ஏர்டெல் நிறுவனம் மத்திய தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி தொகையை நிலுவைத் தொகையாக செலுத்தியுள்ளது.

மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளன. உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் இந்த நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. இந்த பாக்கித் தொகையை கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

ttn

இந்த நிலையில், மத்திய தொலைதொடர்பு துறைக்கு ஏர்டெல் வழங்க வேண்டிய நிலைவை தொகையில் ரூ.10,000 கோடியை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது. ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் நிலுவைத் தொகை பாக்கி ரூ.35,586 கோடி ஆகும். முன்னதாக, பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் ரூ.10,000 கோடியையும், மீதுமுள்ள நிலுவை தொகையை மார்ச் 17-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த  ஏர்டெல் நிறுவனம் ஒத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.