தொற்று நோயை கொண்டாடும் முதல் தேசம்….. தீபம் ஏற்றியதை விமர்சனம் செய்யும் திரிணாமுல் காங்கிரஸ்

 

தொற்று நோயை கொண்டாடும் முதல் தேசம்….. தீபம் ஏற்றியதை விமர்சனம் செய்யும் திரிணாமுல் காங்கிரஸ்

வீடுகளில் நேற்று இரவு தீபம் ஏற்றியதை, தொற்று நோயை கொண்டாடும் முதல் தேசமாக மாறி விட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம், மெழுகுவர்த்தி, டார்ச் மற்றும் செல்போன் லைட்டை ஒளிரசெய்ய வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளில் தீபம் ஏற்றினர். மேலும் டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட்டுகளை ஒளிர செய்து தங்களது ஒற்றுமை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி

மேற்கு வங்கத்திலும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் தீபங்கள் ஏற்றினர். மேலும் கொல்கத்தாவில் இரவு 9 மணிக்கு பிறகு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனையடுத்து பட்டாசு வெடித்ததாக 98 பேரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர். நேற்று மக்கள் தீபம் ஏற்றியதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தொற்றுநோயை கொண்டாடும் முதல் தேசமாக நாம் மாறி விட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

அபிஷேக் பானர்ஜி

அபிஷேக் பானர்ஜி தனது டிவிட்டரில், பட்டாசுகள், ஆடம்ரபமான விளக்குகள் மற்றும் வான விளக்குகள் மூலம் ஒரு தொற்றுநோயை கொண்டாடும் ஒரு தேசமாக நாம் மாறி விட்டோம். ஊரடங்கு விதிமுறைகளை எத்தனை பேர் பின்பற்றினார்கள்  என்பதையும் நான் சந்திக்கிறேன். சுய தனிமை அல்லது சுய அழிவா? எது போதிக்கப்படுகிறது என பதிவு செய்து இருந்தார். முன்னதாக பிரதமர் மோடி தீபம் ஏற்றும்படி கோரிக்கை விடுத்தபோது மம்தா பானர்ஜி அது குறித்து எந்தகருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.