தொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க!?

 

தொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க!?

பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் இவை உடல் எடையை அதிகரிக்கும்

பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் இவை உடல் எடையை அதிகரிக்கும் என்றும் ஒரு பொதுவான கருத்து உள்ளது.ஆனால்  வீட்டில் தறிக்கும் சுத்தாமான நெய்  உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும். ஆரோக்கியமான  வைட்டமின்களும், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நெய்யில் உள்ளன. அவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. 

ghee

உடலில் உண்டாகும் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க நெய் பயன்படுவதாக ஆய்வு கூறுகிறது. ஆனால் இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நெய்யை தேவையான அளவு எடுத்து கொண்டால், அது உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்புகளை நீக்கவும் உதவும்.

ghee

இதில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இதனால், உடலில் உள்ள கொழுப்பு உயிரணுக்களைக் குறைக்கின்றது. எனவே, உடலில் அதிக கொழுப்பு சேர்கிறது என்று நீங்கள் நினைத்தால் உணவுகளில் சிறிதளவு நெய் சேர்த்தால் கொழுப்புகளை நீக்கலாம். நெய்யில் உள்ள ஒமேகா 6 வகை கொழுப்பு அமிலம் உடல் எடையைக் குறைக்க உதவும் 

ghee

அதே சமயம் நெய்யை  அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது உடலுக்குத் தீங்காக அமைகிறது.  எனவே நெய்யை  காட்டிலும் சரியான அளவு உணவுகளை எடுத்து, உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் எந்த ஆபத்தும் இன்றி  உடல் எடையை குறைக்கலாம்.