தொப்பையைக் குறைத்து, இளமையாய் வைத்திருக்கும் பழைய சோறு 

 

தொப்பையைக் குறைத்து, இளமையாய் வைத்திருக்கும் பழைய சோறு 

‘அருவி நீர்  வாதத்தை போக்கும். ஆற்று நீர் பித்தத்தை போக்கும். சோற்று நீர்  இரண்டையும் போக்கும்’ என்பது கிராமத்து சொலவடைகளில் ஒன்று. பழைய சோறு, ஐஸ் பிரியாணி என்பதெல்லாம் வெளிநாட்டவர்களுக்கு இன்று அதிசயமான உணவு பொருளாக இருக்கலாம். ஆனால் பாரம்பரியத்தை மறந்து வாழும் நமக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான உணவு வகை  தான்.  

‘அருவி நீர்  வாதத்தை போக்கும். ஆற்று நீர் பித்தத்தை போக்கும். சோற்று நீர்  இரண்டையும் போக்கும்’ என்பது கிராமத்து சொலவடைகளில் ஒன்று. பழைய சோறு, ஐஸ் பிரியாணி என்பதெல்லாம் வெளிநாட்டவர்களுக்கு இன்று அதிசயமான உணவு பொருளாக இருக்கலாம். ஆனால் பாரம்பரியத்தை மறந்து வாழும் நமக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான உணவு வகை  தான்.  

ice briyani

காலங்காலமாக, முதல் நாள் இரவு மீதமாகிப் போன சோற்றில் தண்ணீர் விட்டு காலையில் குளிர்ச்சியாக சாப்பிடும் உணவு முறையை தான் இன்று ஸ்டார் ஹோட்டல்களில் பத்து இருபது டாலர்கள் விலையில் பரிமாறுகிறார்கள். நமக்கு முந்தைய தலைமுறை  ஆரோக்கியத்துடன் எண்பது வயதிலும் இருந்ததற்கு முக்கிய காரணம் பழைய சோறும், கம்பங்கூழும் தான். 

இப்போது நம்மில் பலருக்கும் காலை உணவாக பிரெட், பால், ஓட்ஸ், நூடுல்ஸ் என்று பழகி விட்டது. பீட்சா, பர்கர் என ஓடிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு பழைய சோற்றின் மகத்துவத்தை மட்டுமல்ல, அதில் ஊற்றியிருக்கும் நீருக்கும் உள்ள முக்கியத்துவத்தையும் சொல்லியே ஆக வேண்டிய அவசியமும் இருக்கிறது. பழைய சோற்றில் ஊற்றி வைத்த நீருக்கு நீராகாரம் எனப்பெயர். எந்த ஃப்ரிட்ஜ்ஜிலும் வைத்து குளிரூட்ட  வேண்டிய  அவசியம் இல்லாமலேயே குளிர்ச்சியாக இருக்கும். 

ice briyani

காலை  எழுந்தவுடன் பித்தத்தினால் உருவாகும் உடல் சூட்டை தணிக்க நீராகாரமே சிறந்தது.மேல்நாட்டினர் அவ்வூர்  குளிர்ச்சியை போக்க அருந்தும் காபி, தேயிலையை பார்த்து நாமும் அதற்கு மயங்கிவிட்டோம்.  பழைய சோற்றில் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் உண்டு. காலை எழுந்தவுடன் சாப்பிடுவதால் உடல் வெப்பம் சீராகி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்கும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை நீக்கும். நாள் முழுவதுமே நம்மை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். உடலை என்றென்றும் இளமையான தோற்றத்தில் வைத்திருக்கும் சக்தி பழைய சோற்றிற்கு உண்டு. தோல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பழைய சோறு அருமருந்து.  

ice briyani

நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு பழைய சோறே சிறந்த காலை உணவு. தினசரி காலை உணவாக பழைய சோறை மாற்றுவோம்.  பழைய சோற்றுடன், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேவையில்லாத கொழுப்புகள் எல்லாம் நீங்கி, ஸ்லிம் ப்யூட்டியாக மாறிவிடுவிர்கள். எந்த அழகு நிலையங்களும், வெளிநாட்டு மருந்துகளும் குறைக்காத தொப்பையைக் கூட, பழைய சோறும், சின்ன வெங்காயமும் குறைத்து விடும்.