தொண்டை வலியால் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. தவறான சிகிச்சை தான் காரணமா?

 

தொண்டை வலியால் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. தவறான சிகிச்சை தான் காரணமா?

அதற்கு மறுநாளே, சங்கீதா ரத்த வாந்தி எடுத்ததால் பயந்து போன கிருஷ்ணன், மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் சங்கீதா. இவருக்கு கடந்த மாதம் தொண்டை வலி அதிகமாக இருந்ததால், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதனால் கடந்த மாதம் 20 ஆம் தேதி சங்கீதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே, சங்கீதா ரத்த வாந்தி எடுத்ததால் பயந்து போன கிருஷ்ணன், மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

ttn

அப்போது மருத்துவர்கள், அறுவை சிகிச்சையில் ஏதாவது தவறு நடந்திருக்கும். சங்கீதாவை நாங்களே சிகிச்சை செய்து குணமாக்கி விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு, சங்கீதா அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து கிருஷ்ணன் தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டு சங்கீதாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

ttn

அங்கு சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சங்கீதா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தவறான சிகிச்சையால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.