தொண்டர்கள் என் பக்கம்தான்; கெத்து காட்டிய டி.டி.வி தினகரன்

 

தொண்டர்கள் என் பக்கம்தான்; கெத்து காட்டிய டி.டி.வி தினகரன்

அ.தி.மு.க வேண்டுமானாலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-இடம் இருக்கலாம்… அ.தி.மு.க தொண்டர்கள் என்னுடன்தான் உள்ளார்கள் என்று மீண்டும் ஒருமுறை கெத்து காட்டியுள்ளார் டிடிவி தினகரன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒ.பி.எஸ், இ.பி.எஸ் கருப்புச் சட்டை அணிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க வேண்டுமானாலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-இடம் இருக்கலாம்… அ.தி.மு.க தொண்டர்கள் என்னுடன்தான் உள்ளார்கள் என்று மீண்டும் ஒருமுறை கெத்து காட்டியுள்ளார் டிடிவி தினகரன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒ.பி.எஸ், இ.பி.எஸ் கருப்புச் சட்டை அணிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ttv dinakaran

முன்னதாக வாலாஜா சாலையிலிருந்து பேரணி தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட்டம் இல்லை.
இதைத் தொடர்ந்து டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஊர்வலம் நடந்தது. இதனால், காமராஜர் சாலையே ஸ்தம்பித்துவிட்டது. ஜெயலலிதா நினைவுநாளில் பார்த்தது போன்ற கூட்டத்தைக் கண்டு பத்திரிகையாளர்கள், போலீசாரே மிரண்டுவிட்டனர். 

crowd

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனி ஒருவனாக நின்று கெத்து காட்டினார் டி.டி.வி தினகரன். அதன் பிறகு செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சின்னம் ஒதுக்கீடு, கட்சி அங்கீகாரம் என்று பல இழுபறிகள், தி.மு.க, அ.தி.மு.க அமைத்த பலமான கூட்டணி காரணமாக வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும், தொண்டர்கள் எல்லாம் டி.டி.வி தினகரன் பக்கமே உள்ளனர் என்று பேச்சு மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் மிகப் பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டி தன்னுடைய கெத்தை நிரூபித்துவிட்டார் டி.டி.வி.