தொண்டனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்! – சன் டி.வி-க்கு எச்சரிக்கைவிடுத்த தி.மு.க எம்.பி

 

தொண்டனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்! – சன் டி.வி-க்கு எச்சரிக்கைவிடுத்த தி.மு.க எம்.பி

சன் டி.வி செய்திகளில் மீம்ஸ் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலான பதிவுகள் பற்றி செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுடலை என்று கிண்டல் செய்து வெளியான மீம்ஸ் ஒன்றை சன் டி.வி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது

மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் வெளியான மீம்ஸை வெளியிட்ட சன் டி.வி-க்கு தி.மு.க எம்.பி செந்தில் குமார் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டி.வி செய்திகளில் மீம்ஸ் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலான பதிவுகள் பற்றி செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுடலை என்று கிண்டல் செய்து வெளியான மீம்ஸ் ஒன்றை சன் டி.வி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மீம்ஸை ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் தருமபுரி எம்.பி செந்தில் குமாரை டேக் செய்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதற்கு செந்தில்குமார் ரியாக்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செந்தில் குமார் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இது உண்மைதானா சன் டி.வி, உண்மை எனில், இதுபோல் செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. கழக தொண்டனின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். இதுபோன்று மலிவு அரசியலில் ஈடுபட வேண்டாம். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த செயலுக்கு மிகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். இது உண்மை இல்லை என்றால் அது பற்றி விளக்கத்தை வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.