தொடர் வெற்றியை தக்கவைத்த காளை! சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடர் வெற்றியை தக்கவைத்த காளை! சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. நஷ்டம்  கணக்கை காட்டிய போதும் ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 9 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தத்தில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், ஸ்டேட் வங்கி, கோடக்மகிந்திரா வங்கி, சன்பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஹீரோமோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஹீரோமோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,140 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,461 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.44 லட்சம் கோடியாக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.21 புள்ளிகள் உயர்ந்து 40,356.69 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 23.35 புள்ளிகள் உயர்ந்து 11,895.45 புள்ளிகளில் நிலை கொண்டது.