தொடர் முறைகேடு புகார்… காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கல்லூரி அங்கீகாரம் ரத்து!

 

தொடர் முறைகேடு புகார்… காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கல்லூரி அங்கீகாரம் ரத்து!

கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை, அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார் அடிப்படையில் சிதம்பரத்தில் செயல்பட்டுவந்த கே.எஸ். அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரத்தை கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் ரத்து செய்துள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகே கீரப்பாளையத்தில் பெருந்தலைவர் காமராசர் கடல்சார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை, அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார் அடிப்படையில் சிதம்பரத்தில் செயல்பட்டுவந்த கே.எஸ். அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரத்தை கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் ரத்து செய்துள்ளது.

k.s.alagiri

கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகே கீரப்பாளையத்தில் பெருந்தலைவர் காமராசர் கடல்சார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் தலைவராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளார். அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கல்லூரியில் போதிய ஆசிரியர்கள் இல்லை, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இல்லை, மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பு என்ற பெயரில் பல லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மும்பையில் உள்ள கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துக்குப் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இயக்குநரகம் கடிதம் அனுப்பியது. மேலும், கல்லூரியிலும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

alagiri college

இதில், கல்லூரிக்கு முதல்வர் இல்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதுடன், அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் கூட மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்று  தெரியவந்தது. மேலும் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு பயிற்சியாளர்களை வைத்து நடத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில், கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதாக கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.