தொடர் பின்னடைவு; தெலங்கானாவில் தெலுங்கு தேசம் போட்டியில்லை!

 

தொடர் பின்னடைவு; தெலங்கானாவில் தெலுங்கு தேசம் போட்டியில்லை!

கடும் அதிருப்தியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்

ஹைதராபாத்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் போட்டியிட போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.

தேர்தல் சமயத்தில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.

chandra sekhar rao

இதனிடையே, தெலங்கானா மாநிலத்தின் பிரதான கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் பெரும்பாலான தெலுங்கு தேசம் கட்சியினர் சேர்ந்தனர். இதனால், அக்கட்சி வலுப்பெற்றது. கடந்த தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டை அமைத்து களம் கண்ட தெலுங்கு தேசம் கட்சி இரு இடங்களில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் அம்மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் போட்டியிட போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 1982-ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி தொட்டங்கப்பட்டதில் இருந்து அக்கட்சி இல்லாமல் முதன்முறையாக தெலங்கானா மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

rahul, chandrababu naidu

தெலுங்கு தேசம் கட்சியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடியும் என கருதப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு தெலங்கானா மாநிலத்தில் போட்டியில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரத் தகவகள் தெரிவித்துள்ளன.

நடப்பு மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ? – வெளியான ஆய்வு முடிவுகள்