தொடர் சரிவை சந்திக்கும் கார் விற்பனை ! முதலில் தொடங்கிய ஆலையை மூட ஹோண்டா முடிவு !

தொடர் சரிவை சந்திக்கும் கார் விற்பனை ! முதலில் தொடங்கிய ஆலையை மூட ஹோண்டா முடிவு !

வாகன உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து இந்தியாவில் நம்பிக்கையுடன் தொடங்கிய ஆலையை மூட முடிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

ஜப்பானை நாட்டை  சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் முதன்முறையாக கிரேட்டர் நொய்டா என்ற ஆலையை தொடங்கியது. இந்தியாவில் தற்போது கார் விற்பனை பெருமளவு சரிந்து விட்டதால், கடந்த 4 வருடங்களாகவே ஹோண்டா நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் தட்டுத்தடுமாறி தான் அது ஆலையை நடத்தி வருகிறது.

வாகன உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து இந்தியாவில் நம்பிக்கையுடன் தொடங்கிய ஆலையை மூட முடிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

honda

ஜப்பானை நாட்டை  சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் முதன்முறையாக கிரேட்டர் நொய்டா என்ற ஆலையை தொடங்கியது. இந்தியாவில் தற்போது கார் விற்பனை பெருமளவு சரிந்து விட்டதால், கடந்த 4 வருடங்களாகவே ஹோண்டா நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் தட்டுத்தடுமாறி தான் அது ஆலையை நடத்தி வருகிறது.
நாட்டின் வாகனச் சந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவால் ஹோண்டா நிறுவனம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17,200 கார்களை விற்பனை செய்த ஹோண்டா நிறுவனம், 2019 ஆகஸ்டில் 8,291 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.2 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த ஆலையில் தற்போது மாதம் 2500 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

honda

இதனால் இந்தியாவில் முதன்முறையாக தொடங்கிய நொய்டா ஆலையை ஹோண்டா மூடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒருவேளை சந்தை நிலவரம் சரியானால், ஆலையை விரிவுசெய்து உற்பத்தியை தொடங்கலாம் என்னும் முடிவுக்கு ஹோண்டா வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அங்கு ஹோண்டாவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகள் வழக்கம் போல இயங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

வாகன சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆலை வெளியேறியது. ஃபோர்டு நிறுவனமும் நேரடி வர்த்தக்கத்தை மஹிந்திராவிடம் ஒப்படைத்துவிட முடிவு செய்துள்ளது. தற்போது அந்த வரிசையில் ஹோண்டா நிறுவனமும் சேர்ந்துள்ளது.