தொடர் சரிவில் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்தது!

 

தொடர் சரிவில் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்தது!

இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்தது.

அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை தொடர்ந்து விலக்கி வருகின்றனர். சில நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் ஏமாற்றம் அளித்தது. பருவமழை நிலவரம் சிறப்பாக இல்லாதது மற்றும் நாளை ஜூலை மாதத்துக்கான பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், எச்.டி.எப்.சி., உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹீரோமோட்டோ கார்ப், ஆக்சிஸ் வங்கி உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் இன்று 831 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,627 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்று முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.22 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் மொத்த பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.22 லட்சம் கோடியாக இருந்தது.

பங்குச் சந்தை

வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.09 புள்ளிகள் குறைந்து 37,847.65 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 59.75 புள்ளிகள் வீழ்ந்து 11,271.30 புள்ளிகளில் நிலை கொண்டது.