தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது….

 

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது….

தொடர்ந்து 2வது வர்த்தக தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் அதிகரித்தது.

மந்த கதியில் இருக்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்க பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இது போன்ற சாதகமான அம்சங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, வேதாந்தா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏா்டெல், இன்போசிஸ், டெக்மகிந்திரா உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,669 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 864 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 156  நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றுமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.48 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.33 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு  எண் சென்செக்ஸ் 147.15 புள்ளிகள் உயர்ந்து 37,641.27 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 47.50 புள்ளிகள் அதிகரித்து 11,105.35 புள்ளிகளில் முடிவுற்றது.