தொடர்ந்து 3வது நாளாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியது….

 

தொடர்ந்து 3வது நாளாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியது….

நம் நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், வெளியே வரும் போது மாஸ்க் அணிவதோடு, சமூக விலகலையும் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

கொரோனா வைரஸ்

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸை தவிர்க்க என்னதான் கடுமையான முயற்சிகள் எடுத்தாலும்  நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. மேலும் தொற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்புகளும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

மாநில அரசுகளின் அறிக்கையின்படி, நேற்று மட்டும் புதிதாக 1,267 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் புதிதாக 466 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து குஜராத் (196), ராஜஸ்தான் (98),  டெல்லி (78) மற்றும் மத்திய பிரதேசம் (78) ஆகிய மாநிலங்கள உள்ளன.