தொடர்ந்து 3வது ஆண்டாக பாலியல் பலாத்கார குற்றங்களில் முதலிடம்… தடுக்க முடியாமல் தடுமாறுகிறதா மத்திய பிரதேசம்?

 

தொடர்ந்து 3வது ஆண்டாக பாலியல் பலாத்கார குற்றங்களில் முதலிடம்… தடுக்க முடியாமல் தடுமாறுகிறதா மத்திய பிரதேசம்?

2018ல் மொத்தம் 5,433 பாலியல் பலாத்கார வழக்குகள் மத்திய பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 3வது ஆண்டாக அதிகம் பாலியல் பலாத்கார குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று தேசிய குற்ற பதிவுகள் பரிவு அறிக்கை வெளியானது. அதில், 2018ல் நாடு முழுவதுமாக மொத்தம் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிரான போராட்டம்

இதில், மத்திய பிரதேசத்தில் மட்டும் 5,433 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவான. இது நாட்டின் மொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 16 சதவீதமாகும். பாலியல் பலாத்காரத்தால் 6 வயதுக்கும் குறைவான 54 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது ஆண்டாக பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகம் நடந்த மாநிலம் என்ற வேதனையான சாதனையை மத்திய பிரதேசம் தன் வசம் வைத்துள்ளது. 

பாலியல் பலாத்கார குற்றங்கள்

ஆண்டு               பாலியல் பலாத்கார வழக்குகள்
2016                              4,882
2017                              5,562
2018                              5,433