தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி……

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி……

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

2019,2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை பன்னாட்டு நிதியம் குறைத்தது. சீனாவில் வைரஸ் நோய் பரவி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஆட்டம் கண்டது.

பன்னாட்டு நிதியம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக்சிமெண்ட், எச்.டி.எப்.சி. நிறுவனம், கோடக்மகிந்திரா வங்கி, ஓ.என்.ஜி.சி. மற்றும் டி.சி.எஸ். உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டாடா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர்கிரிட் மற்றும் ஐ.டி.சி. உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அல்ட்ராடெக்சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,106 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,396 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.64 லட்சம் கோடியாக குறைந்தது.

பங்கு வர்த்தகம் சரிவு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 205.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 41,323.81 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 54.70 புள்ளிகள் இறங்கி 12,169.85 புள்ளிகளில் முடிவுற்றது.