தொடர்ந்து 2வது நாளாக சந்தோஷத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்… ரூ.4.70 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,862 புள்ளிகள் உயர்ந்தது.

 

தொடர்ந்து 2வது நாளாக சந்தோஷத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்… ரூ.4.70 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,862 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தது.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு  நாடு முழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு முடக்கத்தை அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மத்திய அரசின் கடுமையான நடவடிக்கை பங்கு வர்த்தகத்துக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. மேலும் பல நிறுவன பங்குகளின் மிகவும் குறைந்து இருந்ததால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது ஏற்றம் கண்டது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக்மகிந்திரா வங்கி, மாருதி, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் டைட்டன் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஓ.என்.ஜி.சி.
 
மும்பை பங்குச் சந்தையில் 1,213 இன்று நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 989 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.108.48 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4.70 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்  சென்செக்ஸ் 1,861.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28,535.78 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்  சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 516.80 புள்ளிகள் உயர்ந்து 8,317.85 புள்ளிகளில் நிலைகொண்டது.