தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்தது

தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் முதலீட்டு செலவினங்களை இரு மடங்குக்கு மேல் அதிகரிக்க உள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 

சீனா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக்சிமெண்ட், டாடா ஸ்டீல், எல் அண்டு டி, இண்டஸ்இந்த் வங்கி உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோமோட்டோகார்ப் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,732 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 794 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பஜாஜ் ஆட்டோ

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 320.62 புள்ளிகள் உயர்ந்து 41,626.64 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 99.70 புள்ளிகள் உயர்ந்து 12,282.20 புள்ளிகளில் முடிவுற்றது.