தொடர்ந்து சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள்

 

தொடர்ந்து சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள்

இந்த வார பங்கு வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் நஷ்டத்தில் முடிவடைந்தன.

மும்பை: இந்த வார பங்கு வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் நஷ்டத்தில் முடிவடைந்தன.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 218.78  (-0.62%) புள்ளிகள் சரிந்து 34981.02 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 73.20(-0.69%) புள்ளிகள் சரிந்து 10526.80 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 1093 பங்குகள் உயர்வையும், 1489 பங்குகள் சரிவையும் கண்டன.153 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

நாளை குரு நானக் ஜெயந்தி விடுமுறை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வங்கித்துறை நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் வெகுவாக பாதிப்படைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் அதானி போர்ட் (+1.91%), லார்ஸன் & டூப்ரோL&T(+0.57%) நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களையும், விப்ரோ (-2.24%), மஹீந்த்ரா &மஹீந்த்ரா(-2.90%) நிறுவனங்களின்  பங்குகள் சரிந்து பட்டியலில் பின் தங்கின.

தேசிய பங்குச்சந்தையில் அதானி போர்ட் (+1.91%), லார்ஸன் & டூப்ரோL&T (+0.57%) நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களையும், விப்ரோ (-2.24%), மஹீந்த்ரா &மஹீந்த்ரா (-2.90%) நிறுவனங்களின்  பங்குகள் சரிந்து பட்டியலில் பின் தங்கின.