தொடர்ந்து காவுவாங்கும் மெட்ரோ நிலையங்கள்: கணவர் பேச்சை கேட்டு பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி இதுதான்!

 

தொடர்ந்து காவுவாங்கும் மெட்ரோ நிலையங்கள்: கணவர் பேச்சை கேட்டு  பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி இதுதான்!

என் மனைவியை நான்தான் மெட்ரோ ரயில் பயணம் செய்தால் பாதுகாப்பாகவும்,விரைவாகவும் நினைத்த இடத்திற்கு போய் வர முடியும் என்று சொன்னேன்… என்னை விட்டு இவ்வளவு விரைவாக இப்படிப் போவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளியை சேர்ந்தவர் மோனிகா. இவர் தனது உறவினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமீர்பேட்டில் உள்ள விடுதிக்கு செல்ல மெட்ரோ ரயில் பயணம் செய்து தான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் இறங்கி வெளியில் வந்திருக்கிறார். அவர்கள் சாலையை கடக்க முற்பட்ட நேரத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதால் ,மெட்ரோ ரயில் பாலத்திற்கு கீழே மழைக்காக ஒதுங்கியிருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராதவிதமாக மெட்ரோ மேற்கூரையின்  இரும்பு பகுதி அவர் தலையில் விழுந்ததில் மோனிகா மயங்கி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக செல்லும் வழியிலே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த விபத்து குறித்து எஸ்.ஆர்.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து மோனிகாவின் கணவர் ஹரிகாந்த் ரெட்டியிடம்  விசாரித்தபோது அவர், “என் மனைவியை நான்தான் மெட்ரோ ரயில் பயணம் செய்தால் பாதுகாப்பாகவும்,விரைவாகவும் நினைத்த இடத்திற்கு போய் வர முடியும் என்று சொன்னேன்… என்னை விட்டு இவ்வளவு விரைவாக இப்படிப் போவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை “ என்று சொல்லி அவர் கதறியழுதது பார்ப்போரை கலங்கடிப்பதாக இருந்தது. 

ஹைதராபாத் மெட்ரோ நிலையம்

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  மெட்ரோவைக்  கட்டமைத்த எல் அண்ட் டி நிறுவனத்திடம் அமைச்சர் கே.டி.ராமராவ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதுமான இழப்பீடு வழங்க அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில்  எல் அண்ட் டி நிர்வாகம்  பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவதாக தெரிவித்தது.

மெட்ரோ கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதே இந்த விபத்துக்கு காரணம் என்ற பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ,டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் எல் அண்ட் டி நிறுவனம் மெட்ரோவின் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வருவதும்; மேலும் பெங்களூரு மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் அந்நிறுவனம் பெற்றுள்ளதும் அதிர்ச்சி ஏற்படுவதாக உள்ளது!