தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!! இன்று இறுதி ஒருநாள் போட்டி!!

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!! இன்று இறுதி ஒருநாள் போட்டி!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்ற முழு முனைப்பில் இந்திய அணி உள்ளது.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!! இன்று இறுதி ஒருநாள் போட்டி!!

உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் எட்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்ற முழு முனைப்பில் இந்திய அணி உள்ளது.

உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் எட்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக நடைபெற்ற டி20 தொடரில் மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என கோப்பையை கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் ஆடி வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் பலப்பரிட்சை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே இந்திய அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இப்போட்டி துவங்க இருக்கிறது. போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு மிக அதிகமாக இருக்கும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ்.