தொடரும் லாக்டவுன்……இப்பம் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நேரம்….. அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

 

தொடரும் லாக்டவுன்……இப்பம் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நேரம்….. அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

4ம் கட்ட லாக்டவுன் விதிமுறைகள் பெரும்பாலும் டெல்லி அரசின் பரிந்துரைகளுக்கு இணையாக உள்ளது. இப்போது கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நேரம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தொடர்ந்து 3 கட்டங்களாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 54 நாட்கள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் லாக்டவுனை மே 31ம் தேதி வரை  மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து லாக்டவுன் 4.0 நடைமுறைப்படுத்தியுள்ளது.

லாக்டவுன்

அதேசமயம், 4ம் கட்ட லாக்டவுனுக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. முடிதிருத்த கடைகள் திறப்பது, மாநிலத்துக்குள் பொது போக்குவரத்து இயக்குவது போன்ற விவகாரங்களில் மாநில அரசே முடிவு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தளர்வுகள் டெல்லி அரசின் பரிந்துரைகளுக்கு இணையாக உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் விதிமுறைகள் பெரும்பாலும் லட்சக்கணக்கான டெல்லி மக்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் டெல்லி அரசு அனுப்பிய பரிந்துரைகளுக்கு இணையாக உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நமது சுகாதார அமைப்பை தயார் செய்ய லாக்டவுன் காலத்தை நாம் பயன்படுத்தினோம். ஆனால் தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நேரம். மத்திய அரசின் விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லிக்காக விரிவான திட்டம் தயாரிக்கப்படும் மற்றும் நாளை (இன்று) அது அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார்.