தொடரும் பேனர் கலாச்சாரம்: ‘உயிரிழப்புக்கு 2 லட்சம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?’ : உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

 

தொடரும் பேனர் கலாச்சாரம்: ‘உயிரிழப்புக்கு  2 லட்சம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?’ : உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

உயிரிழப்புக்கு ரூ.2 இலட்சம் கருணைத் தொகை தந்தால் பிரச்னை முடிந்துவிடும் என கருதுகிறார்கள்.

சென்னை : பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

subha

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ என்ற  22 வயது இளம்பெண் மீது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்  விழுந்ததால் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பின்பு  அவசர அவசரமாக  அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. இளம்பெண் உயிரிழப்புக்குக் காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் லாரி ஓட்டுநர் மற்றும் பேனர்கள் வைத்தவர்கள் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் மாநகராட்சி அதிகாரிகள் பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்குச் சீல் வைத்துள்ளது.

hc

இந்நிலையில் சுபஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த  நீதிபதிகள், தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கதையாக உள்ளது. உயிரிழப்புக்கு ரூ.2 இலட்சம் கருணைத் தொகை தந்தால் பிரச்னை முடிந்துவிடும் என கருதுகிறார்கள். பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் ‘ என்று தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.