தொடரும் தர்பார் புகைப்பட லீக்: இந்த முறை என்னனு நீங்களே பாருங்களேன்!

 

தொடரும் தர்பார் புகைப்பட லீக்: இந்த முறை என்னனு நீங்களே பாருங்களேன்!

மீண்டும் தர்பார் புகைப்படம் இணையத்தில் லீக்கக்கியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை: மீண்டும் தர்பார் புகைப்படம் இணையத்தில் லீக்கக்கியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

1992ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் திரைப்படம் தர்பார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கிய முதற் கட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவுயடைந்த நிலையில், சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

darbar

இந்த நிலையில் அடிக்கடி  தர்பார் படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடை வைத்தது. அதை தடுக்க படக்குழு பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியைத் தான் தழுவியது. அந்த வகையில் இந்த முறை  மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படம் லீக்காகி உள்ளது. 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வரும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து புகைப்படங்கள் லீக்காகத்தால் படக்குழு மகிழ்ச்சியாக இருந்தனர். தற்போது அவர்களின் சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் புகைப்படங்கள் லீக்காகியுள்ளது அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.