தொடரும் டெங்கு பலி: இளம்பெண் உயிரிழப்பு..!

 

தொடரும் டெங்கு பலி: இளம்பெண் உயிரிழப்பு..!

சில நாட்களுக்கு முன்னர் டெங்குவால் 9 வயது சிறுமி பலியானது தமிழகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன்னர் டெங்குவால் 9 வயது சிறுமி பலியானது தமிழகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து, 11 மாத குழந்தை மற்றும் 13 வயது சிறுமி யோகேஸ்வரி டெங்குகாய்ச்சலால் திருத்தணியில் உயிரிழந்தனர். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் ஒரே பகுதியில் நிகழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

Dengue

திருத்தணியைச் சேர்ந்த, சங்கீதா என்ற 21 வயது பெண்ணிற்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 6 மாத குழந்தை உள்ளது. சங்கீதாவிற்குக் கடந்த வாரம் மிகுந்த காய்ச்சல் இருந்ததால் திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பாட்டுள்ளார். அங்கு அவருக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் சற்றும் குறையாததால் சங்கீதாவைச் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவ மனைக்கு மாற்றியுள்ளனர். அங்கும் அவருக்குத் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

Sangeetha

அதனையடுத்து, இன்று சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கீதாவின் ஆறு மாத குழந்தையின் நிலை என்னவாகும் என்ற அச்சம் அவரின் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  திருத்தணியில் தொடர்ந்து நிகழ்ந்த மூன்று மரணங்களால் டெங்கு பாதிப்பைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.