தொடரும் சுட்டித்தனம்: ஆறு மொழிகளில் கியூட்டாக பேசி அசத்திய தோனியின் மகள்; வைரல் வீடியோ

 

தொடரும் சுட்டித்தனம்: ஆறு மொழிகளில் கியூட்டாக பேசி அசத்திய தோனியின் மகள்; வைரல் வீடியோ

தோனியின் மகள் ஸிவா  6 மொழிகளில் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஞ்சி: தோனியின் மகள் ஸிவா  6 மொழிகளில் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனிக்கு சென்னை ரசிகர்கள் அமோக வரவேற்பு

ttn

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். முன்னதாக சென்னை – பெங்களூர் இடையே நடைபெற்ற ஐபில் 12 வது சீசனின் முதல் ஆட்டத்தில், பங்கேற்ற தோனிக்கு சென்னை ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர். 

தோனியும் ஸிவாவும் 

dhoni

தோனி  கிரிக்கெட்டுக்கு  எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறாரோ, அந்த அளவு தனது மனைவி மற்றும் குழந்தை மீதும் அதிக அக்கறை வைத்திருப்பவராகவே பார்க்கப்படுகிறார். அந்த வகையில் தோனி,    அவ்வப்போது  தனது மகளுடன் உரையாடுவது, விளையாடுவது போன்ற  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அப்படி தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படி இருக்கிறீர்கள்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781) on

அதில், ‘ எப்படி இருக்கிறீர்கள்? என்ற ஒரு கேள்வியை  தமிழ், பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, உருது ஆகிய 6 மொழிகளில் தோனி கேட்க அத்தனை மொழிகளிலும் ஸிவா  அதற்குரிய பதிலை அழகாக அளிக்கிறார்’. இந்த விடியோவானது தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. 

முன்னதாக ஸிவா  ஏற்கெனவே பன்மொழிப் பாடல்கள் பாடியது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டது. இப்படி அடிக்கடி தந்தையும் மகளும் சேர்ந்து செய்யும் இந்த சுட்டிதனங்களை காணவே ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது. அதனால் தான் ஸிவாவின் வீடியோ சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறிவிடுகிறது. 

இதையும் வாசிக்க: கூட்டணி கட்சிக்குள் எதிர்ப்பு; தூத்துக்குடியில் கரை ஏறுவாரா தமிழிசை?