தொடரும் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சோகம்…. நஷ்டம் ரூ.ஆயிரம் கோடியை தாண்டியது….

 

தொடரும் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சோகம்…. நஷ்டம் ரூ.ஆயிரம் கோடியை தாண்டியது….

எம்.டி.என்.எல். நிறுவனம் 2019 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1,065.32 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான எம்.டி.என்.எல். நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் நஷ்டம் மேலும் அதிகரித்துள்ளது.

எம்.டி.என்.எல்.

2019 டிசம்பர் காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.1,065.32 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த நஷ்டம் ரூ.830.89 கோடி என்ற அளவிலே இருந்தது. 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் மொத்த வருவாய் 14 சதவீதம் குறைந்து ரூ.624.9 கோடியாக குறைந்துள்ளது.

எம்.டி.என்.எல்.

அதேசமயம் அந்த காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் தொழிலாளர்கள் செலவினம் ரூ.755.48 கோடியாக இருந்தது. மேலும் அந்த காலாண்டில் எம்.டி.என்.எல். பணியாளர்களில் 14,387 பேர் தானாக முன்வந்து விருப்ப ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுத்தனர்.