தொடங்கியது திருநங்கையர் திருவிழா! கூத்தாண்டவர் கோவில் வரலாறு தெரியுமா?

 

தொடங்கியது திருநங்கையர் திருவிழா! கூத்தாண்டவர் கோவில் வரலாறு தெரியுமா?

திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரின் திருவிழா ஆண்டு தோறும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விழா நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரின் திருவிழா ஆண்டு தோறும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விழா நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

கூவாகத்தையும் அதைச் சுற்றியுள்ள ஏழு ஊர் பொது மக்களும்,தங்கள் வீடுகளில் செய்யப்பட்ட கூழ் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து,கூத்தாண்டவர் கோவில் முன்பு வைத்து வணங்கினர்.அதனைத்தொடர்ந்து கொண்டு வந்த கூழ்  அனைத்தையும் ஒரு ராட்சச கொப்பரையில் ஊற்றி,பிறகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

transgender

500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவை உள்ளூர் மக்கள்தான் நடத்துகிறார்கள்.இதில் கலந்துகொள்ள இந்தியா முழுவதும் இருந்து திருநங்கையர் வருகிறார்கள். ஒரு வாரம் முன்பே விழுப்புரத்தில் அரையெடுத்து தங்கி தயாராகிறார்கள்.

இதற்கு காரணம் மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை.குருஷேத்திரத்தில் பாரதப்போருக்கு பாண்டவர்களும்,கெளரவர்களும் தயாராகிறார்கள்.அந்தக் காலத்தில் போர் துவங்கும் முன் 32 லட்சணங்களும் பொருந்திய ஒரு வீரனை பலிகொடுக்கும் வழக்கமிருந்தது.பாண்டவர்கள் படையில் அப்படி 32 லட்சணங்களும் பொருந்தியவர் மூவர் மட்டுமே,அது கிருஷ்ணன், அர்ஜுனன், அர்ஜுனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்த அரவான். 

transgender

போருக்கு அர்ஜுனனும் கிருஷ்ணனும் முக்கியமாக தேவை என்பதால் ,அரவானை பலிகொடுக்கத் தீர்மானிக்கிறார்கள்.அதற்கு ஒப்புக்கொள்ளும் அரவான் மூன்று நிபந்தனைகள் விதிக்கிறான்.பலியாவதற்கு முதல் நாள் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.வெட்டப்பட்ட பிறகும் குருஷேத்திர போரை என் கண்கள் காண வேண்டும்.என் சாவை மக்கள் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்பது அவன் விதித்த நிபந்தனைகள்.

transgender

இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை,ஒரே ஒருநாள் மட்டும் மனைவியாக வாழ எந்தப் பெண்ணும் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று சிந்தித்த கிருஷ்ணன் மோகினியாக உருமாறினார்.அந்த மோகினி அரவானை மணந்து கொள்கிறாள்.அந்த ஒரு இரவு மட்டும் அவனது மனைவியாய் இருந்துவிட்டு மறுநாள் அரவான் பலியானதும் தனது தாலியை அறுத்து வெள்ளை நிற உடை அணிந்து விதவை ஆகிறாள்.

transgender

இதைத்தான் இங்கே வரும் திருநங்கைகள் வருடம் தோறும் ஒரு சடங்காக நிகழ்த்துகிறார்கள். இந்த கோவிலில் வணங்கப்படும் கூத்தாண்டர் என்பது துண்டிக்கப்பட்ட அரவானின் தலை. தங்களை கிருஷ்ணனின் மோகினி அவதாரமாக பாவித்து பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு பதினெட்டாம் நாள் அரவான் பலியிடப்பட்டதும் தாலி அறுத்து அழுவதாக நடக்கிறது இந்த சடங்கு.பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் தாலி கட்டும் நிகழ்சி வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது.அதற்கு அடுத்த நாள் தேரோட்டமும் அதன் முடிவில் தாலி அறுப்பு நிகழ்ச்சியும் நடக்கும்.

இதையும் படிங்க: பாடல் பெற்ற தலங்கள் வரிசை-5 : திருநல்லூர் பெருமணம்