தொடங்கியதிலிருந்து இப்போதுவரை மாறாத : மைலாப்பூர் ஜன்னல் கடை..!

தொடங்கியதிலிருந்து இப்போதுவரை மாறாத : மைலாப்பூர் ஜன்னல் கடை..!

மொத்தமே ஒரு ஜன்னல் மட்டும்தான். உட்கார பெஞ்சு,சாப்பிட மேசை,பரிமாற ஆள் எதுவும் கிடையாது. ஆனால் பரபரபான வியாபாரம், காலையும் மாலையும்.இந்த ஹோட்டல் சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அருகில் இருக்கிறது. பொன்னம்பல வாத்தியார் தெரு.அந்தத் தெருவில்தான் இந்த ஜன்னல் கடை ; ஊரைத்தூக்கும் பஜ்ஜி வாசனையுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

Mylapore-Jannal-Kadai

பழைமையான வீடொன்றின் தெருவைப் பார்த்த ஜன்னல் ஒன்று திறந்திருக்கிறது. அந்த ஜன்னலுக்கு வெளியே ஆவலாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள். உள்ளே இந்தக் கடையை நடத்தும் சந்திர சேகர்.இரட்டைக் கதவுகள் கொண்ட சிறிய ஜன்னல்தான் அது.இடதுபுறம் மூன்று கம்பிகளை நீக்கி வைத்திருக்கிறார்கள். காலை 7.30 க்கு கடை துவங்குகிறார்கள். 

இட்லி,தோசை,பொங்கல், வடை அவ்வளவுதான் மெனு.வெங்காயச் சட்டினி, தேங்காய் சட்டினி,சாம்பார் மட்டும்தான். ஒரு பிளேட் 30 ரூபாய் என்று விலை வைத்து இருக்கிறார்கள். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை,இல்லாவிட்டால் பொங்கல்,எதுவாக இருந்தாலும் 30 ரூபாய்தான்.கூடவே இவர்களின் ஸ்பெஷலான வாழைக்காய் பஜ்ஜி, உளுந்து வடையும் உண்டு.

jannal kadai

காலை 10.30 க்கு கடையை கட்டிவிடுகிறார்கள். மாலை 4.30-க்கு மறுபடியும் திறக்கப்படும். மாலையில் பொங்கல் தவிர மற்ற எல்லா அயிட்டங்களும் உண்டு. இரவு எட்டுமணிக்கு இங்கே செய்யப்படும் உருளைக்கிழங்கு பஜ்ஜிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அப்போதும் இதே சிஸ்ட்டம்தான். நீங்கள் காசை நீட்டினால்  ஜன்னல் கடையின் பாரம்பரிய மிளகு போண்டாக்கள் இரண்டை சூடாக தட்டில் வைத்து தருவார் சந்திர சேகர். சாப்பிட்டு விட்டு தட்டை வைத்து விட்டு கை கழுவிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

இந்த ஜன்னல் கான்செஃப்ட் கால் நூற்றாண்டாக வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் மைலாபூரில் பல புகழ் பெற்ற மெஸ்களும் சைவ உணவகங்களும் இருக்கின்றன. இருந்தும் சந்திரசேகரின் அப்பா துவங்கிய இந்தக் கடைக்கு அப்போதிருந்தே நிறைய ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். 

சுருக்கமாக சொன்னால், மயிலை வாசிகளில் கற்பாகாம்பாளையும், கபாலியையும் தவிர இந்தக்கடைக்கு வராதவர்கள் யாருமே இல்லை எனலாம்.