தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை ஏற்க முடியாது! – கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை ஏற்க முடியாது! – கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்குக் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

karthi-pc

இது தொடர்வாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவுகளில், “அரசு நிதியை திரட்ட வேண்டும் என்றால் அதற்கு வேறு பல வழிகள் உள்ளன. ஆனால் எதற்கெடுத்தாலும் எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கையில் எடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் மோசமான நடவடிக்கை போன்றது, திருட்டுத்தனமாக குடியரசுத் தலைவர் வடிவிலான அரசாங்கத்தை அமல்படுத்துவதுமாகும்.
இதற்கு பா.ஜ.க அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களை ரத்து செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். அவரை டேக் செய்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “இதுவரை நேரடி தேர்தலையே சந்திக்காத, தொகுதி மக்களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லாதவர்கள் இதை சொல்வார்கள்” என்று கூறியுள்ளார்.