தைரியம் இருந்தா குடியுரிமை சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துங்க! பா.ஜ.க. சவால் விட்ட மம்தா பானர்ஜி….

 

தைரியம் இருந்தா குடியுரிமை சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துங்க! பா.ஜ.க. சவால் விட்ட மம்தா பானர்ஜி….

தைரியம் இருந்தா ஐ.நா. கண்காணிப்பில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துங்க பார்ப்போம் என பா.ஜ.க.வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு பெரும் குடைச்சலை கொடுத்தும் வரும் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அந்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க.

கொல்கத்தாவில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெரிய கூட்டத்தை நடத்தினர். அதில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. தைரியம் இருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஐ.நா.வின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகளை பெறவில்லை என்றால் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. விலக வேண்டும் என தெரிவித்தார்.

வாக்கெடுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.