தே.மு.தி.க.,வை சின்னாபின்னமாக்கத் துடிக்கும் தி.மு.க… வார்த்தையின்றி வதைபடும் விஜயகாந்த்..!

 

தே.மு.தி.க.,வை சின்னாபின்னமாக்கத் துடிக்கும் தி.மு.க… வார்த்தையின்றி வதைபடும் விஜயகாந்த்..!

தே.மு.தி.க., கூடாரத்தை மொத்தமாக காலி செய்ய திமுக டார்கெட் செய்து காய் நகர்த்தி வருகிறது. இதனால் விஜயகாந்த் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

தே.மு.தி.க., கூடாரத்தை மொத்தமாக காலி செய்ய திமுக டார்கெட் செய்து காய் நகர்த்தி வருகிறது. இதனால் விஜயகாந்த் கடும் அப்செட்டில் இருக்கிறார். 

மக்களவை தேர்தலில்  அதிமுக கூட்டணியில் இருந்தது தேமுதிக. வேலூர் மக்களவை தேர்தலிலும் ஆதரவை தந்தது.  அடுத்து  உள்ளாட்சி தேர்தலிலும்  அ.தி.மு.க.,வுடன்  கூட்டணி தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.  இதனால், அக்கட்சியில் இருக்கற நிர்வாகிகளை எல்லாம், இழுத்துக் கொண்டு வாருங்கள் என  தி.மு.க., தலைமை, கட்சி நிர்வாகிகளுக்கு  அசைன்ட்மென்ட் கொடுத்திருக்கிறது. சேலம் எம்.பி., பார்த்திபன் ஏற்பாட்டில் முதல் கட்டமாக டெல்லி மாநில தே.மு.தி.க., நிர்வாகியை, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்த்துவிட்டார்கள். vijayakanth

 அடுத்தக் கட்டமாக, டெல்லியில் தே.மு.தி.க.,வைச் சேர்ந்த 5,000 தொண்டர்களுடன் இணைப்பு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்து, தமிழகத்தில் இருக்கிற தே.மு.தி.க., நிர்வாகிகளை சேர்க்க வேண்டும் என தி.மு.க.,வினர் வலை வீசி வருகிறார்கள்.